ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பயங்கரவாத வீடியோக்கள்: டெலிகிராமிற்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தலை துண்டிப்பு வீடியோக்கள் உட்பட தனது தளத்தில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கத் தவறியதாகக் கூறி, டெலிகிராம் (Telegram) செயலிக்கு எதிராக ஆஸ்திரேலியா , கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) வழக்கு தொடரவுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தலை துண்டிப்பு வீடியோக்கள் உட்பட தனது தளத்தில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்களை நீக்கத் தவறியதாகக் கூறி, டெலிகிராம் (Telegram) செயலிக்கு எதிராக ஆஸ்திரேலியா , கூட்டாட்சி நீதிமன்றத்தில் (Federal Court) வழக்கு தொடரவுள்ளது.

டெலிகிராமில் உள்ள பயங்கரவாத உள்ளடக்கங்கள் குறித்து ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய இணையப் பாதுகாப்பு ஆணையர் (eSafety Commissioner) ஜூலி இன்மான் கிராண்ட் வியாழக்கிழமை இந்த சட்ட நடவடிக்கையை அறிவித்தார்.

இதன் மூலம் டெலிகிராம் நிறுவனம் 54.6 மில்லியன் டொலர் வரை அபராதத்தைச் சந்திக்க நேரிடும்.

நிருபர்களிடம் பேசிய அவர், “டெலிகிராம் தனது சேவையில் பயங்கரவாத ஆதரவுப் பொருட்களைக் கண்டறியவோ, தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தவறிவிட்டது என்றும்; ஆஸ் ஸ்திரேலிய பயனர்கள் புகாரளித்த பின்னரும், அதுகுறித்து அறிந்த பின்னரும் அந்த உள்ளடக்கங்களை நீக்கத் தவறிவிட்டது என்றும், அது சார்ந்த கணக்குகள், குழுக்கள் மற்றும் சேனல்களை நீக்கத் தவறிவிட்டது என்றும் நாங்கள் குற்றம் சாட்டியுள்ளோம்,” என்று கூறினார்.

“இத்தகைய தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பதிவேற்றப்படுவதையும், பகிரப்படுவதையும், பரப்பப்படுவதையும் தடுக்க நியாயமான நடவடிக்கைகளை எடுப்பதும், பயங்கரவாத ஆதரவுப் பதிவுகளைப் பகிரங்கமாகப் பதிவிடுவதைத் தடைசெய்யும் அவர்களின் சொந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் டெலிகிராமின் அடிப்படைப் பொறுப்பாகும்.”

குறிப்பிட்ட இந்த பயங்கரவாத உள்ளடக்கங்கள் கிரைஸ்ட்சர்ச் (Christchurch) மற்றும் பஃபலோ (Buffalo) தாக்குதல்கள், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலை துண்டிப்புகள் மற்றும் மரணதண்டனைகளுடன் தொடர்புடையவை என்றும் கிராண்ட் தெரிவித்தார்.
டெலிகிராம் மறுப்பு

இந்தக் குற்றச்சாட்டுகளைத் மறுப்பதாகவும், நீதிமன்றத்தில் இதை எதிர்கொள்ளப்போவதாகவும் டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை, பிரபல குறியாக்கம் செய்யப்பட்ட (encrypted) செய்திச் செயலியான டெலிகிராம், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 153,085 சமூகங்களை (communities) முடக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டெலிகிராம், உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியர்களால் மாதத்திற்கு 1.5 மில்லியன் முறை இந்தத் தளம் பார்வையிடப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி