பென்சில்வேனியாவில் விமானம் ஒன்றுடன் ஹெலிகாப்டர் மோதி விபத்து
பென்சில்வேனியாவில் சிறிய ரக விமானம் ஒன்றும் ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கார்லைல் நகரில் உள்ள கார்லைல் விமான நிலையத்தில், இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் டிரூப்பர் 3′ என அடையாளம் காணப்பட்ட ஹெலிகாப்டர், மோதலுக்குப் பிறகு பக்கவாட்டில் கவிழ்ந்ததாக சம்பவ இடத்திலிருந்து கிடைத்த ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
‘டிரூப்பர் 3’ ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு நோயாளிகளை அவசர மருத்துவ சேவைக் குழுவினர் பரிசோதித்து வந்த நிலையில், மற்றொரு விமானத்தில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் அவசர சேவைகள் சுற்றி வளைத்துள்ளதுடன், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




