உலகம்

பென்சில்வேனியாவில் விமானம் ஒன்றுடன் ஹெலிகாப்டர் மோதி விபத்து

  • August 20, 2026
  • 0 Comments

பென்சில்வேனியாவில் சிறிய ரக விமானம் ஒன்றும் ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கார்லைல் நகரில் உள்ள கார்லைல் விமான நிலையத்தில், இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் டிரூப்பர் 3′ என அடையாளம் காணப்பட்ட ஹெலிகாப்டர், மோதலுக்குப் பிறகு பக்கவாட்டில் கவிழ்ந்ததாக சம்பவ இடத்திலிருந்து கிடைத்த ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன ‘டிரூப்பர் 3’ ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு நோயாளிகளை அவசர மருத்துவ சேவைக் குழுவினர் பரிசோதித்து வந்த நிலையில், மற்றொரு விமானத்தில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே […]

உலகம்

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

  • August 19, 2026
  • 0 Comments

கென்யாவின் சம்புரு மாவட்டத்தில் இன்று ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 07 விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விமானம் லோயிசாபா வனப்பாதுகாப்புப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. உள்ளூர் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருவதாகவும், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.