ஐரோப்பா

சசெக்ஸ் கோமகனும் கோமகியும் அமெரிக்காவில் இருந்து பிரித்தானியாவிற்கு இடம்பெயர திட்டம்

சசெக்ஸ் கோமகனும் கோமகியும் இந்த மாத இறுதியில் தமது குடும்பத்துடன் பிரித்தானியாவிற்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

‘தி டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஹாரியும் மேகனும் லண்டனுக்கு அருகில் உள்ள தனியார் இல்லத்தில், (அரச குடும்பம் சாராத இல்லத்தில்)  வசிக்க உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டடுள்ளது.

இந்தத் தம்பதியரின் குழந்தைகளான இளவரசர் ஆர்ச்சி மற்றும் இளவரசி லில்லிபெட், செப்டம்பர் மாதம்  பிரித்தானிய பாடசாலையொன்றில் தங்கள் படிப்பைத் தொடங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றம் குறித்து மன்னர் சார்லஸுக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், தனது குடும்பத்தினரை மேலும் சந்திக்கும் இந்த வாய்ப்பை அவர் வரவேற்பதாகவும் கூறப்படுகிறது.

அவர்கள் இங்கிலாந்துக்குத் திரும்பிய பிறகும், தனிநபர்கள் என்ற தம்பதியரின் தகுதியில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்