இந்தியா

ஒடிசாவில் கனமழை – கஜபதியில் இருந்து 1500 பேர் வெளியேற்றம்

வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு கரையை கடந்துள்ளது.

இதனால் ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பலத்த காற்றும் கனமழையும் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வானிலை அமைப்பு மேலும் வடமேற்கு திசையில் நிலப்பகுதியை நோக்கி நகரும் என்றும், நாளைய தினம் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

சூழ்நிலையை ஆய்வு செய்த ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, மோசமான வானிலை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளை விழிப்புடன் இருக்குமாறும் எச்சரித்துள்ளார்.

அத்துடன் எதிர்பாராத வெள்ளம் மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

இதேவேளை புயல் கரையை கடந்த நிலையில், ஒடிசா மாநிலத்தின் கஜபதி பகுதியிலிருந்து சுமார் 1,500 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகம் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வெள்ள நீரில் யாரும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே