இலங்கை

புத்தள – மொனராகலை பிரதான வீதியில் கோர விபத்து – அறுவர் வைத்தியசாலையில்

புத்தள – மொனராகலை பிரதான வீதியில் உள்ள மஹாகோதய (Mahagodaya) பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெல்லவாயவிலிருந்து மொனராகல நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

மஹாகோதய பகுதியில் பயணிகள் இறங்குவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​தனியார் பேருந்து அதன் பின்புறத்தில் மோதியதாகக் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தள பொலிஸ் நிலைய அதிகாரிகள் இவ்விபத்து குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்