பொழுதுபோக்கு

GOAT படக்குழுவுக்கு அதிர்ச்சி.. லீக்கானது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.. நீங்களும் பாக்கனுமா?

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவரும் சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுப்பதாலும், விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருக்கிறது.

இந்நிலையில் GOAT படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதாவது GOAT படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லீக் ஆகியிருக்கிறது.

அதில் விஜய்யும், பிரசாந்த்தும் ஒரு சாலையில் நின்றுகொண்டு தீவிரமாக எதைப்பற்றியோ வாக்குவாதம் செய்யும்படி காட்சிகள் இருக்கின்றன. தற்போது அந்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

எப்படி இந்தக் காட்சி லீக்கானது என்பது தெரியாமல் படக்குழு குழம்பியிருக்கிறதாம். ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் அதன் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் வெளியானது என்பது நினைவுகூரத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content