இலங்கை செய்தி

யாழ்-காரைநகரில் ஆன்மீக எழுச்சியுடன் நடைபெற்ற பாத யாத்திரை

திருவெம்பாவையை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையினால் முன்னெடுக்கபடும் வருடாந்த பாத யாத்திரை 11வது வருடமாக இவ்வருடமும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் நோக்கி ஆன்மீக எழுச்சியுடன் இடம்பெற்றது.

காலை 7 மணியளவில் மாதகல் சம்பில்தறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் ஆரம்பமான பாதயாத்திரை பல ஆலயங்களையும் தரிசித்த வண்ணம் சிவநாமங்களை உச்சரித்த வண்ணம் பொன்னாலை சந்தியினை சென்றடைந்தது.

வருடா வருடம் பாதயாத்திரையை முன்னிட்டு பொன்னாலை நாராயணன் தாகசாந்தி நிலையத்தினால் சிவனடியார்களுக்கான அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ச்சியாக காரைநகர் ஆலயங்களை தரிசித்த வண்ணம் காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை மாலை சென்றடைந்து அடியார்கள் திருவெம்பாவை பூஜையில் கலந்து கொண்டனர்.

பாதயாத்திரை இடம்பெற்ற வழித்தடத்தில் பொதுமக்கள் பூரண கும்பம் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதன்பொழுது அகில இலங்கை சைவ மகா சபையினர், சிவ தொண்டர்கள், சிவ மங்கையர்கள் ,சிவனடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content