உலகம்

பாபா வங்காவின் கணிப்பால் அச்சத்தில் உலக நாடுகள் : நவம்பரில் காலக்கெடு

பாபா வங்காவின் மிகவும் கலக்கமூட்டும் மூன்று தீர்க்கதரிசனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

2026-ஆம் ஆண்டுக்கான அவரது திகிலூட்டும் கணிப்புகளில் சில நடந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இந்த கணிப்புகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு பிரம்மாண்டமான விண்கலத்தின் வருகை, ஒரு மூன்றாம் உலகப் போரின் தொடக்கம் மற்றும் ரஷ்யாவின் தலைமைத்துவத்தில் ஒரு வியத்தகு மாற்றம் ஆகியவே ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முடிய ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், கூறப்படும் இந்தத் தீர்க்கதரிசனங்கள் புதிய கவனத்தைப் பெற்றுள்ளன. மேலும், இவற்றில் ஒரு நிகழ்வுக்கு நவம்பர் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக இந்த ஆண்டில் வானிலையால் ஏற்படும் பேரழிவுகள் மற்றும், ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொடர்ச்சில் கணிப்பிடப்பட்டிருந்ததாகவும், அது தற்போது நடைபெற்றுள்ளதாகவும் வங்காவின் ஆதரவாளர்கள் அல்லது பின்தொடர்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1996-ல் காலமான வங்கா, 9/11 தாக்குதல்கள், செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானாவின் மரணம், 2004 இந்தியப் பெருங்கடல் சுனாமி மற்றும் கோவிட் பெருந்தொற்று ஆகியவற்றை முன்னறிவித்ததாக அவரைப் பின்பற்றுபவர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்