ஐரோப்பா

இங்கிலாந்தில் குடியேற்ற எதிர்ப்பு பேரணி – போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

  • September 12, 2026
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் இன்றைய தினம் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் முகக் கவசம் அணிவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். “தேசபக்தர்கள்” என்று அழைத்துக் கொள்ளும் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம்  நண்பகலில், போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth ஆரம்பமாகும். “வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் குற்றச்செயல்களுக்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்காகவே” இந்த முகக்கவசத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். இதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது பொலிஸாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே […]

ஐரோப்பா

இங்கிலாந்து மற்றும் வேல்ஸுக்கு 21 வெள்ள எச்சரிக்கைகள் விடுப்பு

  • August 29, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. வார இறுதியில் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் இரண்டு வெள்ள எச்சரிக்கைகளும், 21 வெள்ள அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்தின் 71.3 சதவிகிதப் பகுதிகளில் வறட்சி நீடித்த போதிலும் சடுதியாக மழை மற்றும் வெள்ளம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  பர்மிங்ஹாமில் Birmingham  ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தரைமட்ட வெள்ளம், டேம் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட கார்கள் – தலைத்தெறிக்க ஓடிய மக்கள்

  • August 10, 2026
  • 0 Comments

இங்கிலாந்து வரலாறு காணாத வறட்சியைச் சந்தித்து வரும் நிலையில், இரட்டை வழிச்சாலையில் வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்து அந்த தீ பின்னர் காட்டுத்தீயாக மாறியுள்ளது. முதலில் வேனில் ஏற்பட்ட தீ பின்னர்  புதர் நிலப்பகுதிக்கு பரவி காட்டுத்தீயாக உருவெடுத்தது.  இதனால் மக்கள் பலர் நெடுஞ்சாலைகளில் தங்கள் வாகனங்களை கைவிட்டு ஓடினர். இவ்வாறாக சுமார் 23 கார்கள் கைவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட் அருகே A31 சாலையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. குறித்த தீயானது தற்போதும் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் புற்றுநோயை உருவாக்கும் வாயுவால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகள்

  • August 5, 2026
  • 0 Comments

இங்கிலாந்தின் சிறைகளில் வாழும் 09 பேர் தற்போது புற்றுநோயை உண்டாக்கும் ரேடான் வாயுவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை கோரிக்கைகள் மூலம் பெறப்பட்ட புதிய தரவுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வெளிப்பாடு முந்தைய கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்துகிறது, இதன் மூலம் சட்ட வரம்பிற்கு மேல் ரேடான் அளவைப் பதிவு செய்த சிறைகளின் மொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. நீதி அமைச்சகம் (MoJ) காற்றோட்டம் போன்ற தணிப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்பு […]

ஐரோப்பா

இங்கிலாந்தை ஆட்டி படைக்கும் வறட்சி : சுற்றுச்சூழல் முகமை அறிவிப்பு

  • July 30, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் குறிப்பிட்ட 07 பகுதிகள் அதிகாரப்பூர்வமாக  வறட்சியான பகுதிகளாக சுற்றுச்சூழல் முகமையால்  அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஈஸ்ட் ஆங்லியா, ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் மற்றும்  லண்டன் தேம்ஸ் பள்ளத்தாக்கு, ஹாம்ப்ஷையர் மற்றும் ஐல் ஆஃப் வைட், டெவோன் மற்றும் கார்ன்வால், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், மற்றும் வெசெக்ஸ்  ஆகிய இடங்களே வரட்சியான பகுதிகளாக  அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரமான குளிர்காலம் இருந்தபோதிலும், இங்கிலாந்தில் எதிர்பார்க்கப்பட்ட மழையில் 7 சதவீதம்  மட்டுமே பெய்யும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு வறண்ட மாதமாக […]

ஐரோப்பா

இங்கிலாந்து: DWP-யின் புதிய முயற்சி குறித்த வழிகாட்டுதல்

  • July 5, 2026
  • 0 Comments

ஐக்கிய இராச்சியத்தின் வேலை மற்றும் ஓய்வூதியத் துறை (DWP) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, புதிய சலுகைகளுக்கான தகுதி சரிபார்ப்பு அதிகாரங்களின் கீழ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படலாம். இங்கிலாந்து அரசாங்கத்தின் நலத்திட்ட அமைப்பில் உள்ள மோசடி மற்றும் தவறுகளுக்கு எதிரான ஒரு பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தப் புதிய முறை கூறப்படுகிறது. மேலும், இது ஆரம்பத்தில் யுனிவர்சல் கிரெடிட், பென்ஷன் கிரெடிட் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் ஆதரவு உதவித்தொகை (ESA) கோருபவர்களுக்குப் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால போராட்டம் நிறைவு

  • June 30, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த அரசாங்கத்தின் சலுகையை ஏற்பதாக வாக்களித்துள்ள நிலையில் மருத்துவர்களின் தொடர்  போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தில், உள்ளூரில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் 2016 ஆம் ஆண்டின் வழக்கமான பயிற்சி மருத்துவர் ஒப்பந்த விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சராசரியாக 6.6 சதவிகித ஊதிய உயர்வு, ஏப்ரல் 2027-க்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என […]

ஐரோப்பா

அதிக வெப்பம் – இங்கிலாந்தில் முன்கூட்டியே மூடப்படும் பாடசாலைகள்

  • June 22, 2026
  • 0 Comments

அதிக வெப்பம் காரணமாக, இங்கிலாந்து முழுவதும் உள்ள பல பாடசாலைகள் இந்த வாரம் முழுவதும் முன்கூட்டியே மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பிற்கு அமைய வார்மின்ஸ்டரில் (Warminster ) உள்ள கிங்டவுன் (Kingdown ) பாடசாலை, மதியம் 12:25 மணி முதல் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் என்றும்,  பாடசாலைகளுக்கு பிந்தைய பராமரிப்பு மையங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சட்டனில் ( Sutton ) உள்ள ஓக்ஸ் பார்க் உயர்நிலைப் பாடசாலை (Oaks Park High School)  […]

ஐரோப்பா

இங்கிலாந்தை தாக்கும் வெப்ப அலை – அடுத்த 02 மாதங்கள் கடுமையானவை

  • June 22, 2026
  • 0 Comments

இங்கிலாந்தை தாக்கவுள்ள வெப்ப அலை குறித்து ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த வெப்ப அலையை முன்னெப்போதும் இல்லாதது என எச்சரிக்கை விடுத்துள்ள ஆய்வாளர்கள் தொடர்ந்து இரண்டு மாதங்கள் கடினமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேல்மட்டக் காற்று கீழே இறங்கி அழுத்தப்படுவதால் இந்த வெப்ப அலை உருவாகுவதாகவும் ரோயல் வானிலை ஆய்வு சங்கத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் லிஸ் பென்ட்லி ( Liz Bentley ) தெரிவித்துள்ளார். புதைபடிவ எரிபொருள் வெளியேற்றத்தால் நமது காலநிலை மாறி வருவதாகவும், இந்த […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

இங்கிலாந்தின் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் இடைதேர்தல் – கடுமையாகும் மும்முனை போட்டி

  • June 18, 2026
  • 0 Comments

வடமேற்கு இங்கிலாந்தின் மேக்கர்ஃபீல்ட்  (Makerfield) தொகுதியில் இன்று இடைத்தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலை தொடர்ந்து  தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமைப் பதவிக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது, பின்வரிசை உறுப்பினர்களிடையே ஆதரவைப் பெற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham), இத்தொகுதியில் வெற்றி பெற்றால், தலைமைப் பதவிக்காக சர் கெய்ருக்கு சவால் விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ரிஃபார்ம் யுகே கட்சியின் வேட்பாளர் ரொபர்ட் கென்யனுக்கும் (Robert Kenyon)  இத்தொகுதியில் கணிசமான ஆதரவு உள்ளது. […]