அமெரிக்கா முழுவதும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் நோய் தொற்று
வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் சைக்ளோஸ்போரா (cyclospora) எனப்படும் ஒட்டுண்ணியின் பரவல் தற்போது அமெரிக்கா முழுவதும் பரவி வருகிறது.
மேலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிச்சிகன் மாநிலம் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 1,251 நோய்த்தொற்றுகளும் 44 மருத்துவமனைச் சேர்க்கைகளும் பதிவாகியுள்ளன.
அதே நேரத்தில், நியூயார்க்கில் கிட்டத்தட்ட 400 நோய்த்தொற்றுகளும், ஓஹியோ மற்றும் வட கரோலினாவில் தலா சுமார் 200 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
ஓஹியோ மற்றும் வட கரோலினாவில் தலா சுமார் 200 நோய்த்தொற்றுகளும் பதிவாகியுள்ளன.
இந்த நோய்த்தொற்றுகள், காய்ச்சல் போன்ற உடல்நலக்குறைவையும், சில சமயங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு கடுமையான இரைப்பை குடல் அறிகுறிகளையும் ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




