டோக்கியோவில் தொடர் மழை – மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிப்பு
டோக்கியோவில் தொடர்ந்து 34 நாட்களாக மழை பெய்துவருவதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அந்நாட்டின் வரலாற்றிலேயே மிக நீண்ட தொடர் மழைக்காலமாகப் பதிவாகியுள்ளது.
டோக்கியோவில் இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 33 நாட்கள் மழை பெய்திருந்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




