இந்தியா இலங்கை செய்தி

டெல்லி முதல்வருடன் ஜே.வி.பி. செயலர் ரில்வின் சில்வா சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, இன்று (30) டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்து பேச்சு நடத்தியது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, இன்று (30) டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவைச் சந்தித்து பேச்சு நடத்தியது.

இச்சந்திப்பில் டெல்லி கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூத் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போது, டெல்லி மாநில அரசாங்கத்தினால் தமக்களின் தேவைகள் மற்றும் நலன்புரிக்காகவும், டெல்லி நகரின் வளர்ச்சிக்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முக்கிய திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான குழுவினர், ரில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.

பெண்களின் நலன், பொருளாதார வலுவூட்டல் மற்றும் அவர்களின் சுயசார்பை உயர்த்துவதற்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலன், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தில்லி மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இலங்கையில் தற்போது ஏற்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் குறித்தும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலன்புரித் திட்டங்கள் குறித்தும் ரில்வின் சில்வா விளக்கமளித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை