பொழுதுபோக்கு

“கில்லர் கில்லர்..” கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள்…

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது.

தனுஷ் தற்போது தனது 50வது படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக உள்ளார். முன்னதாக அவர் நடித்த கேப்டன் திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. டிசம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம், அடுத்தாண்டு பொங்கல் ரேஸில் களமிறங்குகிறது. ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் மூலம் பிரபலமான அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லரை இயக்கியுள்ளார்.

அதன்படி, வரும் 22ம் தேதி, அதாவது நாளை மறுநாள் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக படு மிரட்டலான போஸ்டரும் வெளியாகியுள்ளது.

https://twitter.com/dhanushkraja/status/1726580844503187915

கையில் துப்பாக்கியுடன் போராளியின் லுக்கில் தனுஷ் மிரட்டலாக போஸ் கொடுத்துள்ளார். அதேபோல், ஃபர்ஸ்ட் சிங்கிளின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ‘கில்லர் கில்லர்’ என்ற டைட்டிலில் கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, கேபர் வாசுகி எழுதியுள்ளார்.

இன்னொரு பக்கம் கேப்டன் மில்லர் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. தனுஷும் தனது போர்ஷனுக்கு டப்பிங் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் இறுதியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்