ஹோண்டுராஸில் 100 மீற்றர் பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து – 09 பேர் பலி
மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நாட்டில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 09 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தின் ஓட்டுனர், 05 பெண்கள் மற்றும் 03 ஆண்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தை அறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




