Consent Preferences
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துகிறது இலங்கை: முப்படைகள் மறுசீரமைப்பு

தேசிய பாதுகாப்பை தற்போதைய நிலையைவிட மேலும் பலப்படுத்துவதுடன், எதிர்கால பாதுகாப்புச் சவால்களை ஆராய்வதற்காக விசேட பாதுகாப்பு மீளாய்வுக்குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
Defence

தேசிய பாதுகாப்பை தற்போதைய நிலையைவிட மேலும் பலப்படுத்துவதுடன், எதிர்கால பாதுகாப்புச் சவால்களை ஆராய்வதற்காக விசேட பாதுகாப்பு மீளாய்வுக்குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. தற்போதுள்ள நிலையைவிட தேசிய பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்.

இதற்காக 2030ஆம் ஆண்டை இலக்காகக் கொண்ட மீளாய்வுத் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகளின் தலைமையில் விசேட பாதுகாப்பு மீளாய்வுக்குழுவொன்றும் நியமிக்கப்படும்.

எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்புச் சவால்கள், அழுத்தங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து இந்தக் குழு விரிவாக ஆராயும்.

அத்துடன், முப்படைகளினதும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கும், நவீன காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப படையினருக்குத் தேவையான வசதிகளையும் கட்டமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை