ஆயுத ஏற்றுமதி மீதான கட்டுப்பாட்டை தளர்த்தலாமா? சுவிஸில் பொதுவாக்கெடுப்பு
சுவிட்சர்லாந்தில் ஆயுத ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கும் வாக்கெடுப்பு இன்று முன்னெடுக்கப்படவுள்ளது
இது நாட்டின் பாரம்பரிய நடுநிலை கொள்கை மற்றும் அதன் ஆயுத தொழிற்துறையின் எதிர்காலத்தை பாதிக்கும் என மூத்த அரசியல் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து, 1907 ஆம் ஆண்டின் நடுநிலைமை குறித்த ஹேக் உடன்படிக்கைகளைப் பின்பற்றுகிறது.
இந்த உடன்படிக்கைகள், நேரடியாக அச்சுறுத்தப்பட்டாலன்றி, ஆயுத மோதல்களில் பங்கேற்பதையோ அல்லது எந்தவொரு தரப்பினருக்கும் இராணுவ ஆதரவை வழங்குவதையோ தடுக்கின்றது.
இந்நிலையில் 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து இந்த நிலைப்பாடு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
முன்னதாக வாங்கப்பட்ட சுவிஸ் வெடிமருந்துகளையும் போர் வாகனங்களையும் கீவ்விற்கு உதவுவதற்காக ஐரோப்பிய நாடுகள் அனுப்புவதற்கு பெர்ன் தடை விதித்துள்ளது.
இதன் விளைவாக, நாடுகள் ஆயுதங்களைத் தவிர்த்ததால், 2023 மற்றும் 2024-ல் சுவிஸ் ஆயுத ஏற்றுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
அத்துடன் உள்ளூர் ஆயுதத் தொழில்துறை மற்றும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சுவிட்சர்லாந்தின் திறன் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து போர் தளவாட ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளைக் குறைக்க சுவிஸ் நாடாளுமன்றம் 2025-ல் வாக்களித்தது.
இது, நாட்டின் நேரடி ஜனநாயகப் பாரம்பரியத்தின் கீழ் எதிர்ப்பாளர்களிடமிருந்து ஒரு பொது வாக்கெடுப்பைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




