ஐரோப்பா

சுவிட்ஸர்லாந்திற்கு சுற்றுலாச் சென்ற பேருந்து விபத்து – 05 பேர் பலி

  • September 11, 2026
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்தில் முதியவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 45 பேருடன் பயணித்த குறித்த பேருந்து ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள கிராபுண்டன் Graubünden மாகாணத்தில், சுஷ் மற்றும் செர்னெஸ் Zernez  கிராமங்களுக்கு இடையே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்தால் தாங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியும் பேரழிவும் அடைந்துள்ளதாக சுற்றுலா நிறுவனமான ஓட் (Oad) தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், டச்சு வெளியுறவு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கார்மார்த்தன்ஷையரில் (Carmarthenshire) உள்ள கிட்வெல்லியில் (Kidwelly) பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கிட்வெல்லி சுற்றுச்சாலைக்கு அருகில் உள்ள A484 சாலையில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் அவசர சேவையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி விபத்தை  தொடர்ந்து அப்பகுதியூடான போக்குவரத்து தடை பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மாற்று வழியை பின்பற்றுமாறு வேல்ஸ் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.