Consent Preferences
உலகம்

19 OPEC உறுப்பு நாடுகளின் கூட்டம் இன்று – ரஷ்யா பங்கேற்பு

சவூதி அரேபியா, ரஷ்யா மற்றும் பிற 19 OPEC+ உறுப்பு நாடுகளின் கூட்டம் இன்று காணொளி வாயிலாக இடம்பெறவுள்ளது.

2027-ஆம் ஆண்டுக்கான தங்களின் உற்பத்தி ஒதுக்கீடுகளை நிர்ணயிப்பது தொடர்பில் உறுப்பு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே  நிச்சயமற்ற சந்தை நிலவரத்திற்கு மத்தியில், இந்தப் பேச்சுவார்த்தைகள் கடினமாக இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு மற்றும் அதன் கூட்டணி நாடுகள் (OPEC+), ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்குமான புதிய அடிப்படைத் திறன் அளவுகள் குறித்த முக்கியப் பிரச்சினையையும் விவாதிக்கும்.

மேலும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, ஜனவரி மாதத்திற்கான தற்போதைய உற்பத்தி ஒதுக்கீடுகளை OPEC+ தக்கவைத்துக் கொள்ளக்கூடும் என்று, அந்த அமைப்பில் உள்ள அடையாளம் தெரியாத இரண்டு பிரதிநிதிகளை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கத.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்