உலகம்

கென்ய தலைநகரில் கட்டுமானத்தில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

  • October 23, 2026
  • 0 Comments

கென்யாவின் தலைநகர் நைரோபியில் Nairobi கட்டுமானத்தில் இருந்த 12 மாடிக் கட்டிடம் ஒன்று இன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிந்து விழுந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் மக்கள் வசித்து வந்ததாக கூறப்படுகின்ற நிலையில், இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.