உலகம் கருத்து & பகுப்பாய்வு

செல்லப்பிராணிகளின் உரோமங்களில் இருந்து வைரம் – உலகையே வாய்பிளக்க வைத்த சீனா

சீனாவில் செல்லபிராணிகளின் உரோமங்களை பயன்படுத்தி வைரம் செய்யும் தொழில் பிரபலமாக வளர்ந்து வருகிறது.

இதற்காக செல்வந்தர்கள் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது நாயின் உரோமத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட வைர மோதிரத்திற்காக 8,950 யுவான் (US$1,350) பணத்தை செலவழித்துள்ளார்.

தற்போது இந்த தொழில் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலான விவாதம் எழுந்துள்ளது.

அதாவது இறக்கும் தருவாயில் இருக்கும் செல்லப்பிராணிகளின் உரோமங்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு பிரின்சஸ்-கட் வைரங்களாக உருமாற்றப்படுகின்றன. அதனைக்கொண்டு மோதிரம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு மோதிரத்தை உருவாக்க குறைந்தது 3 கிராம் உரோமம் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது.

விற்பனையாளர்கள் உரோமம் அல்லது சாம்பலை சுத்தம் செய்து, உலர்த்தி, அரைத்து கார்பனைப் பிரித்தெடுக்கிறார்கள். பின்னர் அந்த கார்பன் மற்ற பொருட்களுடன் இணைக்கப்பட்டு, உயர் அழுத்தம், உயர் வெப்பநிலை (HPHT) செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வைரமாக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது குறைந்தது 20 பிராண்டுகள் செல்லப்பிராணிகளுக்கான நினைவு வைரங்களை வழங்குகின்றன என்றும், ஒரு காரட் எடையுள்ள முடிக்கப்பட்ட வைரங்கள் பொதுவாக 10,000 முதல் 30,000 யுவான் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உயர்ரக நாய்களை பொருத்து விலையும் மாறுப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்