உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் பிரித்தானிய வீரர் ஒருவர் பலி
உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தொன்றில் பிரித்தானியாவின் ஆயுதப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விவரங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகத் தங்களுக்குச் சிறிது அவகாசம் அளிக்குமாறு அவ் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் படை வீரரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சகம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.




