உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஆபத்தான வழியில் பயணித்த கப்பல் கண்ணிவெடியில் சிக்கி விபத்து

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றிச் சென்ற  எண்ணெய்க் கப்பல் ஒன்று கண்ணிவெடியில் சிக்கி வெடித்ததாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படை அறிவித்துள்ளது.

“அங்கீகரிக்கப்படாத மற்றும் அபாயகரமான பாதை வழியே சென்ற கப்பலே இவ்வாறு வெடித்துள்ளதாக அப்படை குறிப்பிட்டுள்ளது.

அந்த எண்ணெய்க் கப்பல் குறித்த விவரங்களை ஈரானின் புரட்சிகர கடற்படை வெளியிடவில்லை.

இதற்கிடையே குறித்த நீர்வழிப் பாதையில் இதுவரை 04 கப்பல்கள் கண்ணி வெடியில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஈரானிய படைகள் தெரிவித்துள்ளன.

மேலும், அந்தக் கப்பல்கள் எச்சரிக்கைகளைப் புறக்கணித்து நீர்வழியின் தடைசெய்யப்பட்ட பகுதிகளாகக் கருதப்படும் இடங்களுக்குள் நுழைந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் குறைந்தது 10 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் இன்ஸ்டிடியூட் ஃபார் நியர் ஈஸ்ட் பாலிசி Washington Institute for Near East Policy வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்