பொழுதுபோக்கு

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அந்த காலத்து கிளாமர் குயின்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் இந்த முறை மிக பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

அந்த வகையில் தமிழ் திரை உலகில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற ஒரு முன்னணி நடிகையும் சென்றுள்ளார்..

கவர்ச்சி நடிகையாக தனது பயணத்தை தொடங்கிய விசித்திரா, குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும், பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கவுண்டமணி, வடிவேலு, செந்தில் உள்ளிட்ட பல முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து இவர் நகைச்சுவை நாயகியாகவும் வலம் வந்திருக்கிறார்.

இறுதியாக கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இரவு பாடகன் என்ற திரைப்படத்தில் நடித்ததோடு இவர் வெள்ளித்திரையில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகிய நாடகங்களில் நடிக்க துவங்கினார், கடந்த 22 ஆண்டுகளாக நாடகங்களிலும் நடித்து வரும் நடிகை விசித்ரா அவர்கள், அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வந்து அசத்தியது அனைவரும் அறிந்ததே.

தற்பொழுது அவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content