பொழுதுபோக்கு

ஜனநாயகனை ஒளிபரப்ப தடை விதிப்பு!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை இணையதளங்கள் மற்றும் கேபிள் ‘டிவி’க்களில் ஒளிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச்சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் அப்படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகவில்லை.

எனினும், சில நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் படம் சட்டவிரோதமாக வெளியானது.

இந்நிலையில், இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் இந்த படத்தை ஒளிபரப்ப தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது.

நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுதாரர் தரப்பில், ‘தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கும் முன்பாகவே இணையதளத்தில் ஜனநாயகன் திரைப்படம் கசியவிடப்பட்டுள்ளது.

மேலும், கோவையில் கேபிள் டிவியிலும் இந்த படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. அதிக செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை சட்டவிரோதமாகஇணையதளங்கள், கேபிள் டிவிக்களில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, ஜனநாயகன் படத்தை இணையதளங்கள், கேபிள் டிவிக்களில் சட்டவிரோதமாக ஒளிபரப்பக் கூடாது என இடைக்காலத்தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!