ஐரோப்பா

எரிபொருள் பற்றாக்குறை – முடங்கும் விமானப் பயணங்கள்!

லுஃப்தான்சா நிறுவனம் ஏராளமான  விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதுடன், நைஜீரிய விமான நிறுவனங்கள் விமானப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தப்போவதாக  அச்சுறுத்தியுள்ளன.

ஈரான் போரின் காரணமாக ஜெட் எரிபொருள் விநியோகம் குறைந்து வருவது மற்றும் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருவது குறித்து அரசாங்கங்களும் விமான நிறுவனங்களும் மிகுந்த அவசர எச்சரிக்கைகளை விடுத்து வருகின்ற நிலையில் இவ் எச்சரிக்கை வந்துள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து, சில வாரங்களுக்குள் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இந்நிலையில், விமான நிறுவனங்கள்  கட்டணங்களை உயர்த்தியுள்ளன.  அத்துடன் எரிபொருள் கூடுதல் கட்டணங்களை அறிமுகப்படுத்தியுள்ளதுடன்,  சில வழித்தடங்களைக் குறைத்துள்ளன.

இது, வட அரைக்கோளத்தின் உச்சக்கட்ட கோடை காலத்திற்கு முன்னதாக பயணத்தை சீர்குலைத்து, பல ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான நெருக்கடியை விமானத் துறையில் ஏற்படுத்தியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்