Labour கட்சியின் மாற்றத்திற்கான இறுதி வாய்ப்பு
உள்ளாட்சித் தேர்தல்களில் தொழிலாளர் கட்சிக்கு (Labour Party) எதிராக விழுந்த வாக்குகள், மாற்றத்திற்கான ஒரு உரத்த குரல் என்று பர்ன்ஹாம் Andy Burnham தெரிவித்தார்.
பொதுமக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய கட்சிக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பு இது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவைப் போன்ற பிளவுபட்ட அரசியலைத் தவிர்த்து, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் புதிய பாதையை உருவாக்க வேண்டியது அவசியம் என்று Andy Burnham குறிப்பிட்டுள்ளார்.
” மக்களின் குரலுக்கு செவிசாய்த்து, நாட்டைச் சரியான திசையில் கொண்டு செல்ல கட்சி உடனடியாகச் செயல்பட வேண்டும் .
இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காது .
ஒரு ஒருங்கிணைந்த அரசியலின் மூலம் மட்டுமே மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியும்.” என மேலும் Andy Burnham கூறியுள்ளார்.
Makerfield இடைத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இதனையடுத்து ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Labour கட்சியின் அடுத்த தலைவரே இவர் என்ற கோணத்திலும் தற்போது பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.




