Andy Burnham அபார வெற்றி – பிரதமரின் தலைப் பதவிக்கு சவால்
Makerfield இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பியுள்ளார்.
தேர்தலில் தொழிலாளர் கட்சி (Labour Party) வேட்பாளரான Andy Burnham, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட Reform UK கட்சியின் வேட்பாளர் Robert Kenyon ஐ 9,231 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
Andy Burnham இன் இந்த வெற்றி தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரின் Keir Starmer தலைமைக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு இங்கிலாந்துப் பகுதிகளுக்கு அதிக அதிகாரத்தையும் நீதியான அரசியலையும் பெற்றுத் தருவதாக Andy Burnham தனது உரையில் உறுதியளித்துள்ளார்.
Reform UK கட்சியை வீழ்த்தியதன் மூலம், பர்ன்ஹாம் நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த மேயர் பதவிக்கு ஜூலை மாத இறுதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
பிரித்தானிய அரசியலில் இந்தத் தேர்தல் முடிவு ஒரு முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.





