நியூயோர்கில் பரபரப்பு : இளைஞர் மீது வாள்வெட்டு
நியூயோர்கின் டைம்ஸ் சதுக்கத்தில் இருக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் இளைஞர் ஒருவரின் கழுத்தில் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் இதன்போது துப்பாக்கி பிரயோகமும் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பத்தில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் பெல்லிவியூ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது நிலை சீராக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இந்த கைகலப்பின் போது, 17 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்றும், சம்பவப் பகுதியில் இருந்து ஆயுதம் ஒன்று மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





