பொழுதுபோக்கு

அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்… விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா?

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார்.

இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் பணியாற்றுகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தை விரைவில் முடித்து இந்த வருட கோடை விடுமுறைக்கோ அல்லது தீபாவளிக்கோ ரிலீஸ் செய்ய மகிழ் திருமேனி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார்.

இந்நிலையில் விடாமுயற்சி படம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு டூயட் பாடல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான ஃபோட்டோஷூட்டும் சமீபத்தில்தான் முடிந்தது என்றும்; விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்க்கலாம் என்றும் ஒரு தகவல் ஓட ஆரம்பித்திருக்கிறது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content