இங்கிலாந்தில் குடியேற்ற எதிர்ப்பு பேரணி – போராட்டக்காரர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
இங்கிலாந்து முழுவதும் இன்றைய தினம் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் போராட்டங்களில் கலந்துகொள்பவர்கள் முகக் கவசம் அணிவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். “தேசபக்தர்கள்” என்று அழைத்துக் கொள்ளும் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டம் நண்பகலில், போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth ஆரம்பமாகும். “வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் குற்றச்செயல்களுக்கான வாய்ப்புகளைக் குறைப்பதற்காகவே” இந்த முகக்கவசத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். இதேவேளை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பும் போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது பொலிஸாருக்கும், போராட்டக்கார்களுக்கும் இடையே […]




