கிரீஸில் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் கீழே விழுந்து விபத்து
கிரீஸில் உள்ள ஜாகிந்தோஸ் (Zakynthos) விமான நிலையத்தில், நேற்றைய தினம் F-16 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது.
விமானி அதில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




