ஐரோப்பா

கிரேக்கத்தில் காட்டுத்தீ – தம்பதியர் பலி, குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்

  • August 17, 2026
  • 0 Comments

கிரேக்கத் தீவான சலாமினாவில் Salamina காட்டுத்தீயில் சிக்கி தம்பதியர் உயிரிழந்துள்ளனர். பெரிஸ்டேரியா Peristeria கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்றால் தீ குடியிருப்பு பகுதிகளுக்கு வேகமாக பரவ வழிவகுத்துள்ளது. பெரிஸ்டேரியா மற்றும் செலினா பகுதிகளில் காட்டுத்தீ அச்சம் நீடிப்பதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், கடல் வழியாக மக்களை வெளியேற்ற படகுகளைப் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் சுமார் 260 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 15 தரைப்படைகள், 10 […]

ஐரோப்பா

கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்கள் விபத்து

  • August 2, 2026
  • 0 Comments

ஏதென்ஸுக்கு மேற்கே இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வரலாறு காணாத வெப்ப அலை காரணமாக கிரீஸ் காட்டுத்தீயுடன் போராடி வருகின்றது. இந்நிலையில் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு ஹெலிகாப்டர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. தீயணைப்புத் துறையால் வாடகைக்கு எடுக்கப்பட்டு, நான்கு பணியாளர்களுடன் பயணித்த இரண்டு பெல் ஹெலிகாப்டர்கள், ப்சாதா  (Psatha) பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நடுவானில் மோதிக்கொண்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது. பணியாளர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டன. […]

ஐரோப்பா

கிரீஸில் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் கீழே விழுந்து விபத்து

  • July 10, 2026
  • 0 Comments

கிரீஸில் உள்ள ஜாகிந்தோஸ் (Zakynthos) விமான நிலையத்தில்,  நேற்றைய தினம் F-16 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. விமானி அதில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

கிரீஸில் காட்டுத்தீ – இருவர் உயிரிழப்பு

  • July 2, 2026
  • 0 Comments

கிரீஸில் ஃபிதியோடிடாவில் (Fthiotida) காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 135 வீரர்கள் மற்றும் 25 விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கு முந்தைய நாள் வடக்கு கிரீஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி தந்தையொருவரும் அவரது 12 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே   பிரான்ஸின் தெற்கு பகுதி முழுவதும் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மார்சேய் (Marseille) அருகே 02 தீவிபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  1,210 ஹெக்டேர் பரப்பளவு சேதமடைந்துள்ளதாக […]