ஒரு மணிநேரத்தில் 112 புதிய கோடீஸ்வரர்கள் : 2025 ஆம் ஆண்டில் புதிய கோடீஸ்வரர்களின் பட்டியல்
2025 ஆம் ஆண்டில் உலகில் கிட்டத்தட்ட 10 இலட்சம் புதிய பணக்காரர்கள் உருவாகியுள்ளதாக யுபிஎஸ் (UBS) நிறுவணத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இது ஒரு நாளைக்கு 2,680-க்கும் மேற்பட்ட புதிய கோடீஸ்வரர்கள் உருவாகுவதையும், , ஒரு மணி நேரத்திற்கு 112 பேர் அல்லது ஒவ்வொரு நிமிடத்திற்கும் கிட்டத்தட்ட இரண்டு பேர் உருவாகுவதை குறிப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சியின் பெறும்பகுதி குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில், இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 118 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் 95 புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர்.
இருப்பினும், சதவீத அடிப்படையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மிக வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
இந்த பட்டியலில் உலகளாவிய முதல் 30 இடங்களில் முதல் ஐந்து இடங்களையும் ஐரோப்பிய நாடுகளே பிடித்துள்ளன.
இதன்படி லிதுவேனியா 8 சதவீதம் என்ற மிக உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, அதாவது 2025-ல் 921 புதிய கோடீஸ்வரர்களை பெற்றுள்ளது.
துருக்கி 6.4 சதவீத வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது, அங்கு 5,650 புதிய கோடீஸ்வரர்கள் உள்ளனர். லாட்வியா 5.7 சதவீத வளர்ச்சியைக் கண்டு, 1,131 கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
ஹங்கேரி 5.3 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது, அங்கு 1,349 புதிய கோடீஸ்வரர்களைப் பெற்றுள்ளது. அயர்லாந்து 5.2 சதவீத வளர்ச்சியுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. அங்கு 9,491 புதிய கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
போலந்தில் வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாகவும், கிரீஸில் 3.5 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
புதிய கோடீஸ்வரர்கள் முந்தைய ஆண்டில் $1 மில்லியன் வரம்பிற்கு எவ்வளவு அருகில் இருந்தார்கள் என்பதைப் பொறுத்தே கணிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போதைய மாற்று விகிதங்களின்படி, $1 மில்லியன் டொலர் என்பது சுமார் €875,000 யூரோவை குறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.







