இலங்கை

சிவராசா அனோஜன் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக சவூதி சென்றது இலங்கை குழு

இலங்கை பிரஜையான சிவராசா அனோஜன் என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைப்பது அல்லது மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக, சட்ட நிபுணர்களைக் கொண்ட இலங்கை குழுவொன்று சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளது.

இலங்கை சட்ட நிபுணர் குழுவில் பின்வருவோர் அடங்குகின்றனர்:

(i) மொஹமட் ஃபைசர் முஸ்தபா – நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி;

(ii) நீதிபதி எம்.டி. மொஹமட் லஃபார் – ஜெட்டாவிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் (Consul General);

(iii) ஹபீஸ் அஸார்ட் நவாவி (PC) – மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், சட்டமா அதிபர் திணைக்களம்;

(iv) கே.ஏ. உப்புல் இந்திக குமாரப்பெரும – ஜனாதிபதி சட்டத்தரணி;

(v) ஃபாரிஸ் ஃபசல் அப்துல் ஹஃபீல் மொஹமட் – சட்டத்தரணி; மற்றும்

(vi) மொஹமட் ரியாஸ்தீன் சில்மி – நாடாளுமன்ற உறுப்பினர் ஃபைசர் முஸ்தபாவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்.

மதநிந்தனை  குற்றச்சாட்டின் கீழ் சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்ட அனோஜனுக்கு அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்