நடுகடலில் விபத்துக்குள்ளான படகு : உயிரை காப்பாற்ற கடலில் குதித்த மக்கள்!
குழந்தைகள் உட்பட சுமார் 150 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று துருக்கி கடற்கரைக்கு அப்பால் மூழ்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக பலர் கடலில் குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பிக் பாஸ் டைமண்ட்” ( “Big Boss Diamond) என்று அழைக்கப்படும் அந்தப் படகு, சுற்றுலா செல்லும் நோக்கில் புறப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த படகில் 20 குழந்தைகள் பயணம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அனைவரும் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்ப அழைத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு மூழ்கியதற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




