இலங்கை

ஆங்கில பாடத்திற்கு ஆசியர் பற்றாக்குறை – 4,861 வெற்றிடங்கள் நிலவுவதாக அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 4,861 ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக  தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்பித்துள்ளது.

அவ் அறிக்கையில், தேசிய பாடசாலைகளில் 386 ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதுடன், மாகாண ரீதியாக ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய மாகாணத்தை பொருத்தவரையில் 1,045  வெற்றிடங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வட மாகாணத்தில் 868  வெற்றிடங்களும், மேல் மாகாணத்தில் 708  வெற்றிடங்களும், வடமத்திய மாகாணத்தில் 465 ஆகவும், வடமேல் மாகாணத்தில் 397 ஆகவும், கிழக்கு மாகாணத்தில் 319 ஆகவும், சப்ரகமுவ மாகாணத்தில் 268 ஆகவும், தென் மாகாணத்தில் 224 ஆகவும் மற்றும் ஊவா மாகாணத்தில் 181 வெற்றிடங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்