ஆங்கில பாடத்திற்கு ஆசியர் பற்றாக்குறை – 4,861 வெற்றிடங்கள் நிலவுவதாக அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் 4,861 ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்பித்துள்ளது. அவ் அறிக்கையில், தேசிய பாடசாலைகளில் 386 ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதுடன், மாகாண ரீதியாக ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய மாகாணத்தை பொருத்தவரையில் 1,045 வெற்றிடங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் வட மாகாணத்தில் 868 வெற்றிடங்களும், மேல் மாகாணத்தில் 708 வெற்றிடங்களும், வடமத்திய மாகாணத்தில் […]



