உலகம்

ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு ஈரான் குறி

ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்நாட்டின் தலைமை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான மேஜர் ஜெனரல் மொசென் ரெஜாய்,  செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், அருகில் உள்ள அமெரிக்க தளங்கள் மட்டுமன்றி தொலைவிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாக்குவோம்.  அது என்னவென்றால், இதுவரை நாங்கள் தாக்காத தளங்களையும் தாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எங்களுடைய ஏவுகணைகள் செல்ல முடியாது என்று அவர்கள் நினைக்கும் சில தீவுகளையும் தாக்குவோம் எனக் கூறிய அவர், ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களையும் தாக்குவோம் என எச்சரித்துள்ளார்.

போரின் முதல் நாளில் இருந்தே தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்