ஐரோப்பா

356 மதகுருமார்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு – இத்தாலி திருசபையின் அறிக்கை வெளியீடு

இத்தாலியின் கத்தோலிக்கத் திருச்சபைக்கு 356 மதகுருமார்கள் பற்றிய பாலியல் குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலோக்னா பல்கலைக்கழகம் மற்றும் புளோரன்ஸின் இன்னோசென்டி Bologna and Florence’s Innocenti Institute  நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.

அறிவிக்கையின்படி,  2001 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் இந்த துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் 385 பாதிக்கப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும், 123 மதகுருமார்கள் இத்தாலிய நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 166 வழக்குளில் நீதித்துறை தீர்ப்பளித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றில் 57 வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஏழு பேர் சிறுவர்கள் என்றும் அவர்கள் பெரும்பாலும் 11 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் இதேபோன்ற விசாரணைகள் நடத்தப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, மதகுருமார்களால் சிறார்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து இத்தாலிய கத்தோலிக்கத் திருச்சபையால் நியமிக்கப்பட்ட முதல் நாடு தழுவிய விசாரணை இதுவாகும்.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்