கருத்து & பகுப்பாய்வு செய்தி

உலக நாடுகளை ஆட்டிப்படைக்க வரிவிதிப்பை பிரம்மாஸ்திரமாக பயன்படுத்தும் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆட்சிக்க வந்ததில் இருந்து கையில் மிக சக்திவாய்ந்த அஸ்திரமாக வரி விதிப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

ஏதேனும் ஒரு நாடு தனக்கு அடிப்பணியாமல் போனாலோ அல்லது, தனது கொள்கைகளுக்கு முரண்பாடாக இருந்தாலோ உடனடியாக அமுல்படுத்தப்படும் திட்டம் வரி விதிப்புதான்.

இவ்வாறான வரி விதிப்புகள் அமெரிக்க பொருளாதாரத்தை பாதிப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றை பெரிதாக பொருட்படுத்ததாக ட்ரம்ப், தனது கொள்கைகளிலும், தீர்மானங்களிலும் விடாபிடியாக இருந்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் ட்ரம்பிற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் தற்பொரு மற்றொரு சுற்று வரி விதிப்பிற்கு தயாராகி வருகிறார். குறிப்பாக 14 நாடுகளை உள்ளடக்கிய வகையில் இந்த புதிய வரி விதிப்பு அறிவிக்கப்படவுள்ளது.

பதவிக் காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளுக்கு ஜனநாயகக் கட்சியினர் காங்கிரஸைக் கட்டுப்படுத்த உள்ள நிலையில், சட்டமியற்றுபவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த வரிகள் விதிக்கப்படுவது சிறப்பம்சமாகும்.

சுங்க வரிகள் என்பவை இறக்குமதிப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகளாகும், அவை நுகர்வோருக்கான செலவுகளை அதிகரிக்கின்றன.

ஆனால், வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற்கும், பெருநிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை அமெரிக்காவில் ஆலைகளை அமைக்கக் கட்டாயப்படுத்துவதற்கும், அரசாங்கத்திற்குப் பணம் திரட்டுவதற்கும், சாதாரண உழைக்கும் வர்க்க வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்குமான ஒரு வழியாகவே ட்ரம்ப் கையாண்டு வருகிறார்.

இதற்கிடையே சமகால அரசியலை உற்றுநோக்கும் நிபுணர்கள் பலரும், இடைக்கால தேர்தலில் தனது கட்சிக்கு ஏற்பட் பின்னடைவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, தன்னால் இன்னும் பொருளாதாரக் கொள்கையை வழிநடத்தவும் அதிகாரத்தைச் செலுத்தவும் முடிகிறது என்பதை உலகுக்கு காட்டவே ட்ரம்ப் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பலரும் விமர்சித்துள்ளனர்.

இதற்கிடையே காங்கிரஸில் உள்ள சில குடியரசுக் கட்சியினர், கட்சியின் அதிர்ச்சியூட்டும் இடைக்காலத் தோல்விகளுக்கு அதிபரின் சுங்க வரிக் கொள்கையே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க ஊடக நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பாக SSRS நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி, மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் ட்ரம்பின் சுங்க வரிக் கொள்கைகள் தேசியப் பொருளாதாரத்தைப் பாதித்ததாகக் கூறியுள்ளனர்.

21 சதவீதமானோர்  அவை உதவியதாகவும், 12 சதவீதமானோர்  எந்த வித்தியாசத்தையும் காணவில்லை என்றும் கூறியுள்ளனர்.

யேல் பல்கலைக்கழகத்தின் வரவு செலவு திட்ட ஆய்வகம், நவம்பர் மாத தொடக்கத்தில், சுங்க வரிகள் அமெரிக்கக் குடும்பங்களின் செலவுகளை ஆண்டுக்கு 900 அமெரிக்க டொலர் என்ற அளவுக்கு உயர்த்தியதாக மதிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி