அறிவியல் & தொழில்நுட்பம்

டைமோர்ஃபோஸ் சிறுகோளால் பூமிக்கு ஆபத்தா? நாசா விஞ்ஞானிகள் தகவல்

கடந்த 2022 ஆம் ஆண்டு நாசாவின் DART விண்கலத்தால் மோதி சேதமடைந்த சிறிய கோளான டைமோர்ஃபோஸ் Dimorphos தற்போது ஒரு பக்கத்தில் தட்டையாகி விண்வெளியில் உருண்டு கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) ஹெரா விண்கலம் எடுத்த படங்கள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.

சுமார் 151 மீட்டர் அகலமுள்ள நீள்வட்ட வடிவ பாறைப் பொருளான டைமோர்ஃபோஸ், 730 மீட்டர் விட்டம் கொண்ட அதன் துணை சிறுகோளான டிடிமோஸைச் சுற்றி வருகிறது.

இவ்விரு சிறுகோள்களும் தற்போது பூமியிலிருந்து சுமார் 193.5 கி.மீ தொலைவில் உள்ளன.

இவை பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்விரு பொருட்களும் பூமிக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.

இருப்பினும் ஒரு விண்கலத்தைப் பயன்படுத்தி மேற்படி விண் பொருளின் பாதையை மாற்றுவதற்கான முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்