இலங்கை செய்தி

பலத்த பாதுகாப்புடன் இலங்கை வந்தடைந்தார் ரஷ்யா சட்டமா அதிபர்

ரஷ்யக் கூட்டமைப்பின் தலைமை சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சான் உத்தியோகபூர்வ பணிநோக்கிலான விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ரஷ்யக் கூட்டமைப்பின் தலைமை சட்டமா அதிபர் அலெக்சாண்டர் குட்சான் உத்தியோகபூர்வ பணிநோக்கிலான விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

ரஷ்யாவின் தலைமை சட்டமா அதிபர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

குட்சானை , விமான நிலையத்தில் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் ட்ஷகார்யன் மற்றும் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த விஜயத்தின்போது, இலங்கையின் சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவுடன் குட்சான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ரஷ்ய சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான விடயங்கள் குறித்து இலங்கையின் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்களுடனும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விஜயத்தின்போது இலங்கைத் தரப்பினருடன் தொடர்ச்சியான சந்திப்புகள் இடம்பெறவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல ஒப்பந்த ஆவணங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

 

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை