உலகம்

கினியாவில் குப்பை மேடு சரிந்து விழுந்து விபத்து – 30 பேர் உயிரிழப்பு

கினியாவின் தலைநகரான கொனாக்ரியில் Conakry,  கனமழையால்  குப்பை மேடு சரிந்து விழுந்ததில், 30 பேர் உயிரழந்துள்ளதுடன், மேலும்  22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெபெசியா Gbessia  கம்யூனில் உள்ள டார் எஸ் சலாம் Dar Es Salam திறந்தவெளி குப்பைக்கிடங்கில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், அருகிலுள்ள கூடாரங்கள், குடிசைகள் மற்றும் ஒரு அடுக்குமாடிக் கட்டிடம் மீது கழிவுகள் கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இடிந்து விழுந்த குப்பைகளுக்கு அடியில் புதைந்திருந்தவர்களைக் கண்டறிய, அவசரகாலப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

மக்களுக்கு வெளியேற்ற அறிவிப்புகள் அனுப்பப்பட்ட போதிலும் பல குடும்பங்கள் அங்கேயே தங்கியிருப்பதாகவும்  கூறப்படுகிறது.

இந்தப் பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு அரசாங்க உதவியும், மீள்குடியேற்றமும் வழங்கப்படும் என்று பிராந்திய நிர்வாக அமைச்சர் டியனபோ டூரே Dienabou Touré உறுதியளித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்