உலகம்

பொருளாதாரத் தடை – எண்ணெய் ஏற்றுமதியை தடுப்போம் என ஈரான் சபதம்

ஈரானின் வர்த்தகப் பங்காளிகளை இலக்காகக் கொண்டு மாபெரும் பொருளாதார தடையை இன்று முதல் அமுல்படுத்தவுள்ளதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது.

இந்நிலையில் பொருளாதாரப் போர் தொடர்ந்தால்” வளைகுடாவிலிருந்து அனைத்து எண்ணெய் ஏற்றுமதியையும் நிறுத்திவிடுவோம் என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரான் மீது அதிகளவிலான பொருளாதாரத் தடைகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் பொருளாதாரத் தடை அந்நாட்டை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே போரிடும் நாடுகள் பல வாரங்களாக ஒன்றுக்கொன்று எதிராக இராணுவத் தாக்குதல்களை நடத்தவில்லை, ஆனால் ஆறு மாத கால மோதலை முடிவுக்குக் கொண்டுவர அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை.

மேலும், அமெரிக்காவின் வசம் ஆயுதப் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. ஆனால் ஈரான் ஆயுதங்களை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆகவே ஆயுத போரை விட பொருளாதார முடக்கமே சிறந்ததாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்