பொழுதுபோக்கு

இந்தியனுக்காக தேசிய விருது வாங்கிய கமல்ஹாசன்.. வீடியோ வெளியிட்ட லைகா

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதை முன்னிட்டு லைகா நிறுவனம் தொடர்ந்து பல போஸ்ட்களை வெளியிட்டு இந்தியன் 2 படத்திற்கான புரமோஷன் பணிகளை ஆரம்பித்துள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் ஒருவழியாக இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என லைகா அறிவித்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றும் ஜூலை மாதம்தான் இந்தியன் 2 வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், லைகா நிறுவனம் உறுதியாக இந்தியன் 2 படத்தை அடுத்த மாதமே வெளியிடும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

அதைக் குறிக்கும் விதமாக தற்போது கம்பேக் இந்தியன் பாடலுடன் புரமோஷன் பணிகளை ஆரம்பித்துள்ளது.

இந்த முறை ரஹ்மானுக்கு பதிலாக அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் வெளியான கம் பேக் இந்தியன் பாடலுடன் தற்போது புரமோஷன் வேலைகளை லைகா நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 ஆண்டுகளை கடந்த நிலையில் அந்தப் படத்திற்காக தேசிய விருதை உலக நாயகன் கமல்ஹாசன் பெற்ற வீடியோவை தற்போது லைகா நிறுவனம் ஷேர் செய்துள்ளது.

இந்த மாத இறுதியில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

28 ஆண்டுகளுக்கு முன்பாக கமல் எப்படி க்யூட்டாக இருக்கிறார் பாருங்க என ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

வரும் ஜூன் மாதம் திட்டமிட்டபடி இந்தியன் 2 திரைப்படம் வெளியானால் ஜூன் 28ம் தேதி கல்கி திரைப்படம் வெளியாகும். மேலும், தீபாவளிக்கு அல்லது டிசம்பர் மாதம் தக் லைஃப் படமும் வெளியாக போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு ரசிகர்களுக்கு கமல்ஹாசன் ட்ரிபிள் ட்ரீட் கொடுத்து ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content