செய்தி விளையாட்டு

2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் விளையாட்டுக் குழு தலைவர் பதவி விலகல்

2032 ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பர ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழு, புதிய தலைமை நிர்வாக அதிகாரியைப் (CEO) தேடும் பணியில் இறங்கவுள்ளது.

2032 ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பர ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழு, புதிய தலைமை நிர்வாக அதிகாரியைப் (CEO) தேடும் பணியில் இறங்கவுள்ளது.

தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான சிண்டி ஹூக் (Cindy Hook), தமது ஒப்பந்தக் காலம் நிறைவடைந்ததும் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட சிண்டி ஹூக்கின் நான்கு ஆண்டுகளுக்கான ஒப்பந்தக் காலம், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையவுள்ளது.

இது தொடர்பில் ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தலைமை நிர்வாக அதிகாரிக்கான தேடல் “உடனடியாகத் தொடங்கும் என்றும், எதிர்வரும் மாதங்களில் புதிய நியமனம் வழங்கப்படும் என்றும்” எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி