அரசியல் இலங்கை செய்தி

மஹிந்த ராஜபக்சவுக்கு நடந்தது என்ன?

மஹிந்த ராஜபக்சவை உளரீதியாக வீழ்த்துவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறது. ஆனால், அந்த முயற்சி வெற்றியளிக்காது. மஹிந்தவின் உடல்நிலை மோசமாக இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவை உளரீதியாக வீழ்த்துவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறது. ஆனால், அந்த முயற்சி வெற்றியளிக்காது. மஹிந்தவின் உடல்நிலை மோசமாக இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்சவின் இருதய நோய் தீவிரமடைந்து, அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
மஹிந்த ராஜபக்சவுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்ததாலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே,
“மஹிந்தவின் நிலை பாரதூரமாக உள்ளது, அவர் உளரீதியாக வீழ்ந்துவிட்டார் என்றெல்லாம் வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. மஹிந்தவை உளரீதியாக வீழ்த்துவதே அரசாங்கத்தின் இலக்காகவும் உள்ளது. ஆனால், மஹிந்த என்பவர் அவ்வாறு எளிதில் வீழ்த்தக்கூடிய நபர் கிடையாது.
சாதாரண மருத்துவப் பரிசோதனைக்காகவே மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நிலைமை பாரதூரம் என வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை” – என்றார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை