உலகம்

ஈரான் தாக்குதலில் சேதமடைந்த தென்கொரிய கப்பல் – மறுக்கும் தெஹ்ரான்

  • July 1, 2026
  • 0 Comments

HMM (011200.KS) நிறுவனத்தால் இயக்கப்படும் ‘நமு’ என்ற தென்கொரியாவின் சரக்கு கப்பல் ஹார்மூஸ் ஜலசந்தியில் மே மாதம் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், சேதங்கள் சரிசெய்யப்பட்டவுடன், ஜூலை மாத நடுப்பகுதியளவில் அப்பகுதியில் இருந்து வெளியேறும் என தென் கொரியாவின் கடல்சார் அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில், சரக்குக் கப்பலின் பின்பகுதிக்கு அருகில் அதன் அடிப்பாகம் பலத்த சேதமடைந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சியோல் கூறியதுடன், தனது விசாரணையின் முடிவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், […]

கைது வேட்டை மூலமாகவே இந்த அரசாங்கம் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

ஆட்சியை தக்கவைக்கவே ‘கைது வேட்டை’- கதறுகிறார் விமல்

  • July 1, 2026
  • 0 Comments

கைது வேட்டை மூலமாகவே இந்த அரசாங்கம் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டுவருகின்றது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “அரச ஊழியர்கள் தமக்கென ஒரு வாகனம் கொள்வனவு செய்யும் யுகத்தை உருவாக்குவோம் என ஆட்சியாளர்கள் உறுதியளித்தனர். ஆனால் இன்று 20 கிலோ அரிசி கடன் தவணை அடிப்படையில் வழங்கப்படுகின்றது. அரசாங்க ஊழியர்களே, இந்த அரசாங்கத்துக்கு தபால்மூலம் வாக்குகளை அள்ளிவழங்கினர். ஆனால் […]

உலகம்

வெனிசுலாவை சுற்றி பறக்கும் அமெரிக்க உளவு ட்ரோன்கள்

  • July 1, 2026
  • 0 Comments

நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, வெனிசுலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமெரிக்கப் படைகள் வலுவாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் 900இற்கும் மேற்பட்ட வீரர்களும், கரீபியன் மையங்களான புவேர்ட்டோ ரிக்கோ ( Puerto Rico ‌) மற்றும் குராசோவில் (Curacao)   சுமார் 800 வீரர்களும் உள்ளதாக   அமெரிக்காவிற்கான  உயர்மட்ட ஜெனரல்  தெரிவித்தார். அதேநேரம் வெனிசுலாவின் மீது குறைந்தது நான்கு அல்லது ஐந்து MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்களை அமெரிக்க இராணுவம் நிலைநிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது வெனிசுலா அதிகாரிகளுக்கான உளவுத் […]

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமையான UNRWA-வின் 100 மில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு உலக நாடுகளுக்கு, ஐ. நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் அவசர அழைப்பு விடுத்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிதிப் பற்றாக்குறை – பாலஸ்தீன அகதிகளின் வாழ்க்கை ஆபத்தில்

  • July 1, 2026
  • 0 Comments

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமையான UNRWA-வின் 100 மில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு உலக நாடுகளுக்கு, ஐ. நா. சபை பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் அவசர அழைப்பு விடுத்துள்ளார். குறித்த நிதிப் பற்றாக்குறை காரணமாக மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நன்கொடையாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஐநா செயலாளர் , ” பெரும் நிதிப் பற்றாக்குறை மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் முழுவதும் இந்த முகமையின் பணிகளுக்கு […]

FIFA உலகக்கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். செய்தி விளையாட்டு

கோல் வேட்டை: 2ஆவது இடத்துக்கு முன்னேறிய பிரான்ஸ் வீரர்

  • July 1, 2026
  • 0 Comments

FIFA உலகக்கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவீடன் அணியை வீழ்த்திய பிரான்ஸ் (3-0), காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (Round of 16) தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், உலகக்கிண்ணத் தொடர்களில் எம்பாப்பேயின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 16 கோல்களுடன் இருந்த […]

உலகம்

வெனிசுலா நிலநடுக்கம் – 06 நாட்களின் பின் சிறுவன் உயிருடன் மீட்பு

  • July 1, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் ஆறு நாட்களாக சிக்கியிருந்த மூன்று வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். கிளைபர் மோரன் என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுவனை, ஜோர்டானிய மீட்புக் குழுவினர் லா குவைரா மாநிலத்தில் இடிபாடுகளிலிருந்து மீட்டுள்ளனர். குறித்த சிறுவன் தற்போது கராகஸில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் […]

லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் (Kahna) உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் (Tuition Centre) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உலகம் செய்தி

கூரை இடிந்து விழுந்து 14 சிறுவர்கள் பலி: பாகிஸ்தானில் சோகம்

  • July 1, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகே கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்ததில், அதற்குள் சிக்கி 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் (Kahna) உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தில் (Tuition Centre) இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர். இந்தக் கட்டிட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், மேலும் முதற்கட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு நேரப்படி […]

உலகம்

லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு நெதன்யாகு களவிஜயம்

  • June 30, 2026
  • 0 Comments

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று, இஸ்ரேலிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். இதன்போது துருப்புக்களுடன் பேசிய அவர், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் வரை, நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து இஸ்ரேல் பின்வாங்காது என்று  கூறியுள்ளார். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய மற்றும் லெபனான் அரசாங்கங்கள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிக்கு நெதன்யாகு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் இரண்டு […]

இலங்கை

ஹெரோயின் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை

  • June 30, 2026
  • 0 Comments

ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவருக்கு அனுராதப்புர நீதவான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. கெக்கிராவை வீதி, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் 3.074 கிராம் ஹெரோயின்  வைத்திருந்தமைக்காக குற்றாவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். சுமார் 04 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நபர்  சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதை  அடுத்து, மேற்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உலகம்

குடியுரிமை மறுசீரமைப்பு : காங்கிரஸிடம் உதவி கோரும் ட்ரம்ப்

  • June 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிக விசாவிலோ வசிக்கும் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் அமெரிக்கக் குடிமக்கள் அல்ல என்று ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்திருந்த உத்தரவு எதிராக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தை மீள நடைமுறைப்படுத்த காங்கிரஸின் பங்களிப்பை அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் தனது ட்ருத் சோசியல் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், “நீண்ட மற்றும் சிக்கலான அரசியலமைப்புத் திருத்தம் எதுவும் தேவையில்லை. நமது நாட்டிற்குச் செலவுமிக்கதும் நியாயமற்றதுமான பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டுவர காங்கிரஸ் […]