உலகம்

லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு நெதன்யாகு களவிஜயம்

Netanyahu to meet Greek and Cypriot leaders in Jerusalem

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று, இஸ்ரேலிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.

இதன்போது துருப்புக்களுடன் பேசிய அவர், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் வரை, நாட்டின் தெற்குப் பகுதியிலிருந்து இஸ்ரேல் பின்வாங்காது என்று  கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய மற்றும் லெபனான் அரசாங்கங்கள் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பகுதிக்கு நெதன்யாகு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் இரண்டு பகுதிகளை லெபனான் இராணுவத்திடம் ஒப்படைக்கும்.

இதற்கிடையே இஸ்ரேலிய இராணுவம், இஸ்ரேலிய எல்லையின் முழு நீளத்திற்கும் லெபனானுக்குள் சுமார் 10 கி.மீ (6 மைல்கள்) தொலைவிற்கு ஒரு “இடைநிலை மண்டலத்தை” உருவாக்கியுள்ளது.

ஹிஸ்புல்லா நடத்தும் தாக்குதல்களிலிருந்து வடக்கு இஸ்ரேலிய சமூகங்களைப் பாதுகாக்க இந்த மண்டலம் அவசியம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்